Monday, 3 October 2011

செய்வது எப்படி - கேழ்வரகு மோர்க்கூழ்


தேவையானவை: 

ராகி மாவு 100 கிராம், மோர் மிளகாய் – 2, சிறிது புளித்த மோர் – 200 மில்லி, கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

ராகி மாவுடன் மோர், உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு, மோர் மிளகாய் தாளித்து, கரைத்த மாவை ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: 

இட்லி மிளகாய்ப் பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன். மோருடன் ராகி மாவைக் கலந்து, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அப்படியே குடிக்க… பசி அடங்கும். 

No comments:

Post a Comment