தேவையானவை:
கேழ்வரகு மாவு – 4 டீஸ்பூன், பாசிப்பருப்பு – 6 டீஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பால் – 100 மில்லி.
செய்முறை:
பாசிப்பருப்பை வறுத்து குழைவாக வேகவிடவும். கேழ்வரகு மாவுடன் பாலை சேர்த்துக் காய்ச்சி ஆற வைக்கவும். அதில் வேக வைத்த பாசிப்பருப்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து அப்படியே சாப்பிடவும்.
குறிப்பு:
இதே முறையில் உப்பு, சிறிய வெங்காயம் நறுக்கிப் போட்டு, மோர் விட்டு… பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து குடிக்கலாம். இதைக் குழந்தைகளும் குடிக்கலாம்.
No comments:
Post a Comment