Wednesday, 28 September 2011

செய்வது எப்படி - கருப்பட்டி தினை அப்பம்


தேவையானவை: 
கருப்பட்டி – 100 கிராம், தினை மாவு – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 100 மில்லி, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்.

செய்முறை: 
கருப்பட்டியை நசுக்கி தினை மாவில் போட்டு, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில் சிறிது நெய் தடவி மாவை விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து அப்பத்தை தயாரிக்கவும்.

குறிப்பு:
 மாவுடன் வாழைப்பழத்தை நன்கு மசித்துப் போட்டும் தயாரிக்கலாம். பண்டிகைகளுக்கு மிகவும் ஏற்றது இந்த அப்பம்.

No comments:

Post a Comment