Saturday, 22 October 2011

செய்வது எப்படி? - கேழ்வரகு தோசை


சமைக்கும் நேரம்: நிமிடம் (ஒவ்வொரு தோசைக்கும்)

தேவையானவை:

  • இட்லி (அ) தோசைக்கு ஏற்றவாறு அரைத்த கேழ்வரகு மாவு
  • எண்ணெய் - தோசைக்கல்லில் தடவ (நான் ஸ்டிக் கடாவிற்கு எண்ணெய் தேவையில்லை)
செய்முறை

  • தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். கல் சூடானவுடன் தோசை மாவை ஊற்றி நன்கு பரப்பி, எண்ணெய் ஊற்றவும்.
  • அடுப்பில் தீயை மிதமாக வைத்துக்கொண்டு 1 நிமிடம் வேகவிடவும், பின் திருப்பவும், இப்படி இருமுறை செய்யலாம் (நல்ல முறுவலாக வேண்டுமென்றால்).
  • சூடான கேழ்வரகு தோசை தயார், சட்னி, சாம்பாருடன் சேர்த்து சுவைக்கலாம்.

For English:


How to Cook - Ragi (Finger Millet) Idli


Ingredients:

  •  Ragi batter for Idli and Dosa – 4 cups

Method:

  • Grease idli mould; mix ragi batter well and fill up the mould; steam cook for 8 to 10 minutes.
  • Now smooth spongy ragi idli is ready.
  • Serve with chutney and milagai podi.
  • You can cook in microwave oven also for 2 minutes in full power.
Tips
  • Ragi idlis come out well in microwave oven also.
தமிழில்:

Wednesday, 12 October 2011

செய்வது எப்படி? - கேழ்வரகு இட்லி


தேவையானவை:

அரைத்த கேழ்வரகு மாவு (இட்லி, தோசைமாவு பதத்தில்) - 4 கிண்ணம்

செய்முறை:

  • இட்லி மாவை நன்கு கலக்கி, இட்லி தட்டில் ஊற்றவும், பின் 8 லிருந்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும்.
  • மென்மையான இட்லி தயார்.
  • சட்னி அல்லது மிளகு பொடி தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
  • மைக்ரோவேவனில் 2 நிமிடத்தில் வேகவைக்க முடியும். (FULL POWER)

குறிப்புகள்:

கேழ்வரகு இட்லி மைக்ரோவேவனிலும் நன்றாக, அழகாக வேகும்.

For English: 

http://poonguzhalivaanibam.blogspot.com/2011/10/how-to-cook-sprouted-ragi-finger-millet.html

How to Cook? - Ragi (Finger Millet) Dosa


Cooking time: 2 minutes for each dosa

Ingredients

  • Ragi batter for Idli and Dosa
  • Oil – to sprinkle on dosa

Method

  • Heat a non-stick pan or normal dosa pan and grease it lightly when warm; pour the batter and spread it as thin as possible; apply light oil on the periphery.
  • Keep for 1 minute in low flame; turn and cook the other side also; repeat this for remaining batter.
  • Crisp, thin sprouted ragi dosa is ready. Serve hot with any chutney or sambar.

How to Cook? - Ragi (Kezhvaragu) Kali


Ingredients

  • Ragi flour – 1 cup
  • Salt – pinch (as per taste)
  • Oil – few drops
  • Water – 3 cups

Method

Step 1
  • Mix 1 cup of Ragi in 1½ cup of water without lumps and keep.

Step 2
  • Boil 1½ water, add salt, few drops of oil; when starts boiling, lower the flame, add ragi mix, keep on stirring for 6 to 8 minutes.

  • Dip your finger in water and touch ragi; if it sticks, cook for some more time; if you need thick and firm kali, keep for 2 more minutes; otherwise use it with soft texture;
  • Serve hot with Kollu Masiyal, cut onion and green chilli.
Tips
  • Ragi kali when hot, looks lose and not firm; after cooling it becomes firm.

Ragi Kara Adai (Finger Millet Savory Pancake)


Cooking time: 30 minutes

Ingredients

  • Ragi flour or finger millet flour – 2 cup
  • Grated coconut – ½ cup
  • Chopped onion – ¼ cup
  • Chopped curry/coriander leaves – ½ cup
  • Sour and thin buttermilk – 1 cup
  • Whole wheat or all purpose flour – 1 table spoon
  • Asafetida powder – pinch
  • Salt – as per taste
  • Oil – 1 tea spoon

Method

  • Put all the items, except oil and buttermilk in a bowl; mix well; add buttermilk and make a slight loose dough (if needed add little more water); slightly loose dough helps to spread adai easily on the tawa.
  • Heat a tawa or skillet; when it is warm, grease and spread handful of dough thinly; make a small hole in the centre and add a drop of oil to make it crisp in the centre also; add little oil on the periphery and cook for few minutes in low flame.
  • Turn and cook the other side also; repeat this for the remaining dough also.
  • Serve hot with any chutney.
Tips
  • Those who are not used to spread adai with hand on warm skillet, spread it on a plantain leaf or aluminum foil then lay it on hot tawa.
  • Adding 1 table spoon of wheat or all purpose flour helps to spread and bind ragi flour.

Ragi Sweet Adai (Finger Millet Sweet Pancake)


Cooking time: 20 minutes

Ingredients

  • Ragi flour – 2 cup
  • Grated coconut – ½ cup
  • Whole wheat or all purpose flour – 1 table spoon
  • Chopped jaggery – ½ cup (adjust as per sweetness of jaggery)
  • Cardamom powder – ¼ tea spoon
  • Ghee or oil – 1 table spoon

Method

  • Boil ¾ cups of water, add jaggery and switch off heat; dissolve jaggery in water and filter it; take ragi, whole-wheat flour, grated coconut, cardamom powder in a bowl.
  • Add jaggery water, mix and make a slightly  loose dough; if needed add little more water so that you can spread it on the tawa easily; heat a pan or tawa, grease it when the pan is warm; take small amount of dough and spread on the tawa quickly; sprinkle some ghee/oil on the periphery, cook it in low flame; make a small hole in the centre and pour a drop of oil to make it crisp in the centre also.
  • After few minutes turn and cook the other side also; you can see the colour change, when ragi adai is cooked; repeat this for the remaining dough also.
  • Serve hot. If you keep it for long time, it may become little hard.
Tips
  • Those who are not used to spread it on hot tawa, they can first spread it on a plantain leaf or aluminum foil and then lay it on the tawa.
  • Whole wheat flour or all purpose flour helps to spread adai easily on tawa and to bind ragi flour.

Kambu (Bajra) Adai (Pearl Millet Pancakes)


Ingredients

  • Pearl millet – 2 cup
  • Rice – ½ cup
  • Toor dal – ½ cup
  • Bengal gram – ½ cup
  • Urad dal and green gram split – ¼ cup each
  • Onion – 2 no
  • Green chilli – 2 no
  • Red chilli – 6 no
  • Garlic cloves – 4 no
  • Ginger – small piece
  • Fennel seeds – 2 teaspoon
  • Turmeric powder – ½ teaspoon
  • Curry leaves – few
  • Salt – as per taste
  • Oil – for making adai

Method

  • Soak pearl millet with rice; soak toor dal with Bengal gram; soak urad dal with green gram split; soak all the three sets in separate containers for 6 hours.
  • Chop onion, green chilli, ginger and garlic; in a mixi jar add red chilli, green chilli, ginger, garlic, half of fennel seeds and salt; grind for few seconds.
  • Add washed pearl millet and rice; grind to rava consistency and remove.
  • Add Bengal gram, toor dal and grind coarsely.
  • Add this with pearl millet paste; wash, drain, add urad dal and green gram in the pearl millet paste; add chopped onion, curry leaves, remaining one teaspoon fennel seed and turmeric powder with pearl millet paste; mix well, add some water and make a batter (like idli batter).
  • Heat a skillet, pour one ladle of adai batter, spread and sprinkle some oil; when cooked, turn and cook the other side also till crisp; repeat for remaining batter also.
  • Serve hot with chutney.
Tips
  • No need to grind soaked urad dal and green gram.

Kambu (Bajra) Sadam and Koozh (Pearl Millet Savory Porridge)


Ingredients

  • Pearl millet (whole) or kambu – 1 cup
  • Buttermilk – 1 cup
  • Green chilli – 2 no
  • Pearl onion – few
  • Water – 2 cup
  • Salt – as per taste

Method

  • Kambu sadam: Sprinkle some water in pearl millet and keep for 10 minutes; put it in a mixi jar and run the mixer once or twice in whipper mode; now the grain is partially mashed mildly.
  • Add water and wash once to remove extra skin or fiber; add 2 cups of water and pressure cook it like rice; now the pearl millet is cooked and can be consumed as Kambu Sadam with any curry or gravy.
  • Kamban koozh: Shape this cooked kambu as small balls and keep it in water for couple of hours (5 to 6 hours).
  • Mash the balls well, add buttermilk, sufficient water, salt and mix well.
  • Garnish with chopped onion, green chilli and serve chilled.
Tips
  • Alternate method: You can mix pearl millet flour in water (for one cup flour use three cup water) and cook till thick; after cooling, mix with buttermilk, salt and serve.
  • When cooked, pearl millet gives a nice aroma.

Kambu ( Bajra ) koozh


Ingredients

Bajra flour - 1/2 cup
water - 2 cups
salt to taste
buttermilk - 1 cup

Method

Mix bajra flour with 1 cup of water.
Now add the remaining water .
Keep it on the stove and stir it continuously
and cook for 5 min.
Switch off and allow it to cool completely.
Add buttermilk and salt.Mix well.

Thursday, 6 October 2011

செய்வது எப்படி - தேனும் தினை மாவும், தினை உருண்டை

தினையை நெய்விட்டு (அ) வெறுமனே நன்கு வறுத்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும், இதனுடன் தேனைக் கலந்து சாப்பிடலாம். பனை வெல்லம், வெல்லம் கலந்தும் சாப்பிடலாம்.

தினை உருண்டை

தினை மாவை பனைவெல்லம் (அ) வெல்லம், சுக்கு, ஏலக்காய் பொடி சேர்த்து தேவைப்பட்டால் தேங்காய் துருவல் சேர்த்து நீர்விட்டு நன்கு கலந்து, உருண்டையாக உருட்டிக்கொள்ளவும், இதை ஆவியில் வேகவைத்துச் சாப்பிட்டால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.


Monday, 3 October 2011

செய்வது எப்படி - ராகி மசாலா தோசை


தேவையானவை: 

அரிசி மாவு, ராகி மாவு – தலா 100 கிராம், உருளைக்கிழங்கு – 2, பெரிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் – தலா ஒன்று, கரம் மசாலாத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு, கடுகு – கால் ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

ராகி மாவுடன் உப்பு, அரிசி மாவு சேர்க்கவும் அதில் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கி மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். தோசையை வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு, தோசையின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து இரண்டாக மடிக்கவும்.

குறிப்பு: 

இதை ரோல் மாதிரியும் சாப்பிடலாம். கேரட் துருவல் சேர்க்கலாம். இதற்கு சைட் டிஷ் தேவை இல்லை.

செய்வது எப்படி - சத்துமாவு உருண்டை


தேவையானவை: 

சோளம் – 100 கிராம், கம்பு – 25 கிராம், தினை – 25 கிராம், கேழ்வரகு – 100 கிராம், கொள்ளு – 50 கிராம், பாசிப்பருப்பு – 25 கிராம், நெய் – 100 மிலி, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, சர்க்கரை – 200 கிராம்.

செய்முறை:

 சோளம், கம்பு, தினை, கேழ்வரகு, கொள்ளு, பாசிப்பருப்பு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, ஒன்றாக சேர்த்து மிஷினில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து… நெய்யை சூடாக்கி அதில் விட்டு உருண்டை பிடிக்கவும்.

குறிப்பு:

 சத்து மாவு உருண்டை, வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. பொட்டுக்கடலை, பார்லி, ஜவ்வரிசி, பாதாம் முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, இதேபோல சத்துமாவு உருண்டை தயாரிக்கலாம்.

செய்வது எப்படி - எள்ளுப்பொடி


தேவையானவை: 

எள் – 100 கிராம், உளுத்தம்பருப்பு – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

எள்ளை தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயையும் தனியாக வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு போட்டு மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: 

இதை, சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிட ருசியாக இருக்கும். சுட்ட அப்பளம் இதற்கு நல்ல காம்பினேஷன்.

செய்வது எப்படி - கறிவேப்பிலைக் குழம்பு (பிரசவக் குழம்பு)


இது நம்மளோட பிளாக்கைப் பார்குறவங்களுக்காக இத்யாதி! இத்யாதி!!

தேவையானவை: 

கறிவேப்பிலை – கைப்பிடி அளவு, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு 10, காய்ந்த மிளகாய் – 2, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… மிளகு, கடலைப்பருப்பு, சீரகம், துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தனியாக வதக்கவும். பிறகு, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் கலந்து கொள்ளவும். மீதமிருக்கும் எண்ணெயை கடாயில் விட்டு… கடுகு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் கலவையைப் போட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: 

இது பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் பத்தியக் குழம்பு. சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்தக் குழம்பு போட்டுச் சாப்பிடலாம். மற்றவர்களும் சாப்பிடலாம்.

செய்வது எப்படி - கேப்பை கஞ்சி



தேவையானவை:

கேழ்வரகு மாவு – 4 டீஸ்பூன், பாசிப்பருப்பு – 6 டீஸ்பூன், சர்க்கரை – 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பால் – 100 மில்லி.


செய்முறை: 

பாசிப்பருப்பை வறுத்து குழைவாக வேகவிடவும். கேழ்வரகு மாவுடன் பாலை சேர்த்துக் காய்ச்சி ஆற வைக்கவும். அதில் வேக வைத்த பாசிப்பருப்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து அப்படியே சாப்பிடவும்.


குறிப்பு: 

இதே முறையில் உப்பு, சிறிய வெங்காயம் நறுக்கிப் போட்டு, மோர் விட்டு… பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து குடிக்கலாம். இதைக் குழந்தைகளும் குடிக்கலாம். 

செய்வது எப்படி - கொள்ளு உருண்டை காரக்குழம்பு


தேவையானவை:

கொள்ளு – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 6, துவரம்பருப்பு – 4 டீஸ்பூன், கறுப்பு உளுந்து – 4 டீஸ்பூன், புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

துவரம்பருப்பு, கறுப்பு உளுந்து, கொள்ளு ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்து உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி எடுத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைத்து குழம்பாக தயாரிக்கவும். உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேகவிட்டு எடுத்து, குழம்பில் போட்டு இறக்கவும்.

குறிப்பு:

கொள்ளு, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புச் சத்தைக் குறைக்கும். குழம்பை சாதத்தில் போட்டு உருண்டைகளைத் தொட்டுக் கொள்ள வைத்துக் கொள்ளலாம். உருண்டையை சாதத்துடன் பிசைந்து கொண்டு, குழம்பு தொட்டும் சாப்பிடலாம். இது ஒரு டூ-இன்-ஒன் குழம்பு. 

செய்வது எப்படி - கேழ்வரகு மோர்க்கூழ்


தேவையானவை: 

ராகி மாவு 100 கிராம், மோர் மிளகாய் – 2, சிறிது புளித்த மோர் – 200 மில்லி, கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

ராகி மாவுடன் மோர், உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு… கடுகு, மோர் மிளகாய் தாளித்து, கரைத்த மாவை ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: 

இட்லி மிளகாய்ப் பொடி இதற்கு சிறந்த காம்பினேஷன். மோருடன் ராகி மாவைக் கலந்து, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அப்படியே குடிக்க… பசி அடங்கும்.