தேவையானவை:
தினை, காட்டுக்கம்பு, சோளம்(வெள்ளை), கேழ்வரகு, கொள்ளு - தலா 100 கிராம்
பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு - 20
பசும்பால் - ஒரு குவளை (டம்ளர்)
வெல்லம் (அ) பனை வெல்லம் - தேவையான அளவு
செய்முறை:
தினை, காட்டுக்கம்பு, சோளம்(வெள்ளை), கேழ்வரகு, கொள்ளு - தலா 100 கிராம்
பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு - 20
பசும்பால் - ஒரு குவளை (டம்ளர்)
வெல்லம் (அ) பனை வெல்லம் - தேவையான அளவு
செய்முறை:
சோளம், தினை, கம்பு, கேழ்வரகு, பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, கொள்ளு, எல்லாவற்றையும் தனித்தனியாக சுத்தம்செய்து கொள்ளவும்.வெறும் கடாயில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒருவருக்கு 4 தேக்கரண்டிமாவை ஒருபாத்திரத்தில் போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் நன்கு கரைத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில்வைத்து மிதமானதீயில் கிளறிகொண்டே இருக்கவும். ஈரக்கையில் கஞ்சியைத் தொடும்போது கையில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும் இறக்கவும். பின்பு, கொதிக்கவைத்து ஆறியபால், பொடித்தவெல்லம் சேர்த்துக்கலந்து குடிக்கலாம்.
இந்த கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையார் வேண்டுமானாலும் அருந்தலாம். உடலுக்கு மிகவும் நல்லது.
No comments:
Post a Comment