|
Wednesday, 28 September 2011
செய்வது எப்படி - கருப்பட்டி தினை அப்பம்
செய்வது எப்படி - சோள ரவை உப்புமா
|
செய்வது எப்படி - கம்புதோசை
|
செய்வது எப்படி - சிறுதானியச் சத்துமாவு கஞ்சி
தேவையானவை:
தினை, காட்டுக்கம்பு, சோளம்(வெள்ளை), கேழ்வரகு, கொள்ளு - தலா 100 கிராம்
பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு - 20
பசும்பால் - ஒரு குவளை (டம்ளர்)
வெல்லம் (அ) பனை வெல்லம் - தேவையான அளவு
செய்முறை:

சோளம், தினை, கம்பு, கேழ்வரகு, பாதாம்பருப்பு, முந்திரிப்பருப்பு, கொள்ளு, எல்லாவற்றையும் தனித்தனியாக சுத்தம்செய்து கொள்ளவும்.வெறும் கடாயில் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒருவருக்கு 4 தேக்கரண்டிமாவை ஒருபாத்திரத்தில் போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் நன்கு கரைத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில்வைத்து மிதமானதீயில் கிளறிகொண்டே இருக்கவும். ஈரக்கையில் கஞ்சியைத் தொடும்போது கையில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும் இறக்கவும். பின்பு, கொதிக்கவைத்து ஆறியபால், பொடித்தவெல்லம் சேர்த்துக்கலந்து குடிக்கலாம்.
இந்த கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையார் வேண்டுமானாலும் அருந்தலாம். உடலுக்கு மிகவும் நல்லது.
Wednesday, 14 September 2011
நோக்கம்
பெரும்பாலான நமது மக்களுக்கு, பசுமைப் புரட்சிக்குப் பின் நவதானியங்களின் பெயர்களே மறந்துபோன நிலையில் சிறுதானியங்களின் பெயர்களா நினைவிலிருக்கும். ஆனால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஊட்டச் சத்துக் குறைபாடு நோய்கள் பெருகிக் கொண்டே செல்கின்றன. அவைகளைத் தடுக்க, ஊட்டச் சத்துக்களை ஈடு செய்ய கேழ்வரகு, கம்பு முதலான சிறுதானியங்களை மருத்துவர்கள் பரிந்துரைக்க ஆரம்பித்துள்ளனர்.
விளைவு இன்று அருகிப் போய்விட்ட, ஏறக்குறைய அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரியத் தன்மை கொண்ட, பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களைப் பார்க்காத தரமான சிறுதானியங்கள் மக்கள் மத்தியில் விரும்பப்படுகின்றன. அவற்றை விதைக்கவும், அறுத்து, பிரித்தெடுத்து, சுத்தமாக்கி, உறையிலிட்டுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்வதே பூங்குழலி வாணிபம், இயற்கை விளைபொருள் நிறுவனத்தாரின் நோக்கமாகும்!!

Saturday, 10 September 2011
சிறுதானியங்களின் சிறப்பு
பசுமைப் புரட்சியால் உற்பத்தியைப் பெருக்கினாலும், பாரம்பரிய விவசாயத்தைக் கைவிட்டதால், சிறுதானியங்களின் உற்பத்தி குறைந்துள்ளது.
சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி ஆகிய சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்க தானியங்களாக நிரூபிக்கப்பட்டாலும், பசுமைப் புரட்சிக்குப் பின் மக்கள் மனதிலிருந்து அகற்றி விட்டோம்.
இந்தத் தலைமுறைக் குழந்தைகளிடம் தானியங்கள் பற்றிக் கேட்டால் அரிசி, கோதுமை தவிர மற்ற தானியங்களைப் பற்றி தெரிவதில்லை என்பதைவிட நாம் அவற்றை அவர்களுக்குக் காண்பிக்கவில்லை என்பதே உண்மை. ÷மேலும் நாகரிகத்தின் சின்னமாக அவை அடையாளப்படுத்தப்படுவதில்லை. மாறாக அவற்றை உபயோகிப்பவர்களை தாழ்வாக எண்ணக்கூடிய மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். விளைவு பல்வேறு நோய்களில் சிக்கி நிறைய செலவு செய்கிறோம்.
தற்போது மக்களை நோய்கள் அதிகம் தாக்குவதால் குறிப்பாக நீரிழிவு நோய் கண்டவர்கள் கேழ்வரகை (ராகி) அதிகம் நாடுகிறார்கள். பெரும்பாலான சிறு நகரங்களில் கேழ்வரகு கூழ் விற்பனைக்கு வந்துவிட்டது.
நவநாகரீக உடையில் வருபவர்கள்கூட அதை வாங்கிக் குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ÷கோடைக்காலத்தில் குளிர்ச்சி என்றாலும், உடல்நலத்துக்கு முக்கிய பாதுகாப்பாகவும் விளங்குவதால் அதை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். பெரும்பாலான ஓட்டல்களில் ராகி தோசை, ராகி அடை விற்பனை செய்யப் படுகிறது. அவைகளுக்கு கடும் கிராக்கியும் இருக்கிறது. நட்சத்திர விடுதிகளில்கூட கேழ்வரகு களி அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்: இவை சத்துமிக்க தானியங்கள் மட்டுமின்றி மிகக் குறைந்த நீரே போதுமானது. மழைநீரே போதும், நீர் பாசனம் தேவையில்லை. வளமிக்க மண் தேவையில்லை. ரசாயன் உரம் தேவையில்லை, பூச்சித் தாக்குதல் குறைவு, எனவே பூச்சுக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தவேண்டிய அவசியமுமில்லை.
ரசாயன உரம் உபயோகிக்கத் தேவையில்லை. பூச்சித் தாக்குதல் குறைவு. பல தானிய விதைப்பால் சுற்றுச்சூழல் வளமையாக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு உபயோகங்கள் இதில் உள்ளன.
எனவே கோடைக்காலத்தில் நீர் தேவையைக் கருத்தில் கொண்டும், மண்வளம் இல்லாத விவசாயிகள்கூட இந்தப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்திக் கொள்ளலாம் என்பதே இயற்கை வேளாண்மை ஆர்வலர்களின் கருத்து.

பொதுவாக தாய்பால் குழந்தைகளுக்குக் கிடைக்காமல் போகும்போது கேழ்வரகு கூழ் பரிந்துரை செய்யப்படுவதும், 40 வயதுக்குப் பின் உடல் சீர்கெடும் போது மருத்துவர்கள் பரிந்துரை செய்வதும் இந்த சிறுதானியங்களைத்தான். இன்றைய விவசாய தற்கொலைகளுக்கு அடிப்படை சிறுதானியங்கள் உற்பத்தியை தவிர்த்து வணிகப் பயிர்களுக்கு மாறி, சந்தைப்படுத்துவதில் சிக்கல், அதிக நீர்த்தேவை, விலைமிக்க ரசாயன இடுபொருள்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்றவைகளுக்கு செலவு செய்ய முடியாமல் போனதுதான் காரணம் என்றால் அது மிகையில்லை.
சிறப்பு அம்சங்கள்: இவை சத்துமிக்க தானியங்கள் மட்டுமின்றி மிகக் குறைந்த நீரே போதுமானது. மழைநீரே போதும், நீர் பாசனம் தேவையில்லை. வளமிக்க மண் தேவையில்லை. ரசாயன் உரம் தேவையில்லை, பூச்சித் தாக்குதல் குறைவு, எனவே பூச்சுக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தவேண்டிய அவசியமுமில்லை.
ரசாயன உரம் உபயோகிக்கத் தேவையில்லை. பூச்சித் தாக்குதல் குறைவு. பல தானிய விதைப்பால் சுற்றுச்சூழல் வளமையாக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு உபயோகங்கள் இதில் உள்ளன.
எனவே கோடைக்காலத்தில் நீர் தேவையைக் கருத்தில் கொண்டும், மண்வளம் இல்லாத விவசாயிகள்கூட இந்தப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்திக் கொள்ளலாம் என்பதே இயற்கை வேளாண்மை ஆர்வலர்களின் கருத்து.
Saturday, 3 September 2011
என்னைப் பற்றி!!
புத்தகங்களைப் பதிப்பதுடன், விற்பனையும் செய்கின்றோம், இயற்கை மீதான ஆர்வத்தால் இயற்கை விளைபொருட்களையும் மொத்தமாக விற்பனை செய்கின்றோம்.
எங்களைத் தொடர்பு கொள்ள,
பூங்குழலி வாணிபம்,
21, சிவசண்முகம் தெரு,
மேற்கு தாம்பரம்,
சென்னை - 600 045.
தொலை பேசி: 044 - 4203 4837.
அலைபேசி: +91 - 98842 88228.
மின்னஞ்சல்: poonguzhalivaanibam@gmail.com
வெளியூரில் (வெளிநாடுகளுக்குக் கூட) இருப்பவர்களுக்கும் புத்தகங்கள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள் தங்கள் கேட்பு ஆணையின் பேரில் அனுப்பித் தரப்படும்.
நன்றி!!
பூங்குழலி வாணிபம்.

Subscribe to:
Posts (Atom)