Monday, 3 October 2011

செய்வது எப்படி - ராகி மசாலா தோசை


தேவையானவை: 

அரிசி மாவு, ராகி மாவு – தலா 100 கிராம், உருளைக்கிழங்கு – 2, பெரிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் – தலா ஒன்று, கரம் மசாலாத்தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு, கடுகு – கால் ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 

ராகி மாவுடன் உப்பு, அரிசி மாவு சேர்க்கவும் அதில் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும். தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கி மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கிளறவும். தோசையை வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு, தோசையின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து இரண்டாக மடிக்கவும்.

குறிப்பு: 

இதை ரோல் மாதிரியும் சாப்பிடலாம். கேரட் துருவல் சேர்க்கலாம். இதற்கு சைட் டிஷ் தேவை இல்லை.

No comments:

Post a Comment