Wednesday, 14 September 2011

நோக்கம்

பெரும்பாலான நமது மக்களுக்கு, பசுமைப் புரட்சிக்குப் பின் நவதானியங்களின் பெயர்களே மறந்துபோன நிலையில் சிறுதானியங்களின் பெயர்களா நினைவிலிருக்கும். ஆனால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஊட்டச் சத்துக் குறைபாடு நோய்கள் பெருகிக் கொண்டே செல்கின்றன. அவைகளைத் தடுக்க, ஊட்டச் சத்துக்களை ஈடு செய்ய கேழ்வரகு, கம்பு முதலான சிறுதானியங்களை மருத்துவர்கள் பரிந்துரைக்க ஆரம்பித்துள்ளனர்.

விளைவு இன்று அருகிப் போய்விட்ட, ஏறக்குறைய அழிவின் விளிம்பில் இருக்கும் பாரம்பரியத் தன்மை கொண்ட, பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்களைப் பார்க்காத தரமான சிறுதானியங்கள் மக்கள் மத்தியில் விரும்பப்படுகின்றன. அவற்றை விதைக்கவும், அறுத்து, பிரித்தெடுத்து, சுத்தமாக்கி, உறையிலிட்டுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்வதே பூங்குழலி வாணிபம், இயற்கை விளைபொருள் நிறுவனத்தாரின் நோக்கமாகும்!!

No comments:

Post a Comment